வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அரசியல் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறார். அதுவும், வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியில் இணைந்து அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அங்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் என கூறப்படுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாகிப் அல் ஹசன், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். சமீபத்தில், இவர் தலைமையில் வங்கதேச அணி நடந்து முடிந்த […]