கோவை மாவட்டத்தில் முதல் முறையாக தங்கக்காசுகளைத் தரும் ATM மெஷினானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ஃபுல்மூன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்,’கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் தங்க நாணயங்களை வழங்கும் ஏடிஎம் மெஷினை சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள மென்ஸ் அவென்யூவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஃபுல்மூன் எக்ஸ்போர்ட்ஸின் பங்குதாரர் எல்.எஸ். சீனிவாசன் கூறுகையில்,”கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால்,கடைகளில் நகைகளை நேரடியாக வந்துப் பார்க்க வாடிக்கையாளர்கள் தயங்குகிறார்கள்.எனவேதான்,இந்த தங்க நாணயங்களை வழங்கும் ஒரு புதுமையான ATM மெஷினை […]