விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 24 மணி நேரத்தில் ரத்து செய்தால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வர சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. விமானப் போக்குவரத்து தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்த வரைவு பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விமான பயணச்சீட்டு ரத்துக்கான கட்டணம், அடிப்படை கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணத்தை விட கூடுதலாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிறுவனத்தின் தவறுகாரணமாக தாமதம் அல்லது […]