சென்னை : இன்று காலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடமான நாமக்கல் கவிஞர் மாளிகையில் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை அடுத்து அமைச்சர் ஏ.வ.வேலு பொறியாளர்களுடன் நேரில் சென்று விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட பகுதிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் விரிசல் ஏற்பட்டதாக வெளியான செய்தி குறித்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ” நாமக்கல் கவிஞர் மாளிகையில் […]
சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]
தென்மாவட்டத்தில் பெய்த் அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் இருந்த பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது ஒருசில முக்கிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பினாலும், இன்னும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் […]
மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக , பேரிகார்டு (தடை) வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு தான் நடைபெறுகின்றன. என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘ மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக , பேரிகார்டு (தடை) வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]