சீன ஆட்டோமொபைல் எஸ்.ஏ.ஐ.சி குழுமத்தின் தலைமையின் கீழ் செயல்படும் இங்கிலாந்து நாட்டின் எம்ஜி மோட்டார்ஸ்(MG Motors) நிறுவனம் இந்தியாவில் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.5000 கோடி முதலீட்டை இந்திய மோட்டார் துறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முதல் எஸ்யுவி மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு ஆரம்ப கட்ட பணிகளை எம்ஜி மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு ஒரு கார் மாடலை வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. […]