சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக திறன் கொண்ட பைக்குகளில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது பிஎம்டபிள்யு (BMW). இந்த பைக் மாடலின் 1000 சிசி புது ரக மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வெஞ்சர் ரக மாடல் பைக்காக களமிறங்கியுள்ள இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் 45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) […]
பியாஜியோ நிறுவனம் ஆனது அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட Aprilia Storm 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Aprilia நிறுவனம் இந்த ஸ்கூட்டரை 2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தான் முதலில் அறிமுகம் செய்தது.இந்தியாவில் இதன் விலை ரூ .65,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டி.வி.எஸ் , ஹோன்டா கிரேசியா டிரம் பிரேக் வேரியண்ட் ,என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது .
இஸ்ரோ குறைந்த விலையில் பேட்டரி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான லித்தியம் – அயான் பேட்டரிகள் ஜப்பான் அல்லது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் வாகனங்களுக்கான உற்பத்தி செலவு அதிகமாகிறது. ஆனால் இஸ்ரோ தனது விண்வெளித் திட்டங்களின் தேவைகளுக்காக மலிவு விலையில் பேட்டரிகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக் கோள்களில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. சோதனை அடிப்படையில் […]
நாகலாந்தில் எதிர்க்கட்சியாக உள்ள நாகா மக்கள் முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள். தங்களுக்கு அரசு சார்பில் இன்னோவா கிரிஸ்டா கார் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். நாகலாந்தில் புதிதாக அரசு பதவியேற்றுள்ள நிலையில், அங்கு எம்.எல்.ஏ.க்களின் அலுவல் பணிக்காக அரசு சார்பில் ரெனால்ட் டஸ்டர் கார் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள நாகா மக்கள் முன்னணியின் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தங்களுக்கு ரெனால்ட் டஸ்டர் வேண்டாம் என்றும், இன்னோவா கிரிஸ்டா பிரிமியம் எஸ்.யூ.வி. […]
இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) கடந்த 2 ஆண்டுகளாக கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தநிலையில், 2018-19 ஆம்ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இருசக்கர வாகனம், கார் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் காப்பீடு மூலம் இழப்பீடு கோருகிறார்கள், இழப்பு கொடுக்கப்படும் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி 2018-19 ஆம் ஆண்டுக்கான மாற்றி அமைக்கப்பட்ட […]
வால்வோ இந்தியா கார் நிறுவனம், வால்வோ கார்களின் விலைகள் 5 சதவிகிதம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் கார்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதே இதற்குக் காரணம். 2018-19ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், கார்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.