Tag: AutoFare

#Breaking:ஆட்டோ மீட்டர் மறுகட்டணம் – போக்குவரத்து துறை ஆலோசனை!

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போக்குவரத்து துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி,சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் இணை ஆணையர் தலைமையில் நடைபெறும் இன்று கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும்,நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வரும் நிலையில் ஆட்டோவில் மீட்டர் பொருத்தி இயக்குவது தொடர்பாகவும்,கட்டணம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  

auto 2 Min Read
Default Image