வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கெவின் சின்க்ளேர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்த பிறகு கார்ட்வீல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அனைவரையும் திகைக்க வைத்தார். ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. […]
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வென்றபோது ஆஸி அணியை மார்ஷ் வழிநடத்தினார். இருப்பினும், இந்திய சுற்றுப்பயணத்தின் போது விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட் அணியின் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் விளையாடவுள்ளது. இதில் முதல் இரண்டு டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று (2-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதில் இரண்டாவது டி20 போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. […]