டெல்லி : ரஷ்யா, ஆஸ்திரியா என பிரதமர் மோடி தனது மூன்று நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, டெல்லி வந்தடைந்தார். 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு முதன்முதலில் சென்றார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பல விவகாரம் குறித்து பேசினார். இதை அடுத்து, அங்கு இருந்து ஆஸ்திரியாவுக்கு சென்று அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆஸ்திரியவாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர், […]
வியன்னா: ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள இசைகலைஞர்கள் வந்தே மாதரம் இசைத்து வரவேற்றனர். பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். முன்னதாக ரஷ்யாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு சென்றுள்ளார். 1983ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஆஸ்திரியா நாட்டிற்கு சென்ற பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் தற்போது தான் ஆஸ்திரியா […]
ரஷ்யா : 2 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அங்கு ரஷ்யா அதிபர் புதினின் வரவேற்புக்கு பதிலளித்து பேசி இருக்கிறார். ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையம் சென்றடைந்த மோடியை, ரஷ்யா நாட்டின் மூத்த துணைப் பிரதமரான டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். […]
டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார். பிரதமர் மோடி இன்று (ஜூலை 8) முதல் 3 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்ல உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பெயரில் ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி அங்கு இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது […]
டெல்லி: பிரதமர் மோடி வரும் ஜூலை 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்ல உள்ளர். பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பன்னாட்டு நட்புறவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அதே போல, தற்போது 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தற்போதுள்ள அரசின் […]
யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியில் ஃபிரான்ஸ் அணி, ஆஸ்திரியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரியா அணியை எதிர்த்து பிரான்ஸ் அணி மெர்குர் ஸ்பீல்-அரினா மைதானத்தில் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் இரு அணிகளுக்கு இடையேயேயும் கடுமையான போட்டியானது நிலவியது. முதல் 20 நிமிடங்களில் கோல் வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் கிடைத்தது, ஆனால் துரதிஷ்டவசமாக […]
கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக ஆஸ்திரியாவில் ஜனவரி 24 ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகை உலுக்கி வரும் நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை வீரியமுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது .அதில் ஒன்றாக ஐரோப்பாவிலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவிலுள்ள ஆஸ்திரியாவில் அதிக அளவிலான வைரஸின் தாக்கம் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது. […]
வியன்னாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மசூதியை மூட ஆஸ்திரியா அரசாங்கம் உத்தரவிட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவை சுற்றியுள்ள 6 இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. திங்களன்று நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாக 15 பேர் காயமடைந்தனர். நகரத்தின் மையப் பகுதியில் உள்ள தேவாலயத்தை சுற்றி இந்த தாக்குதல் நடந்தது. தேவாலயத்தை இலக்கு வைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதா..? என்று தெரியவில்லை . […]