கடந்த சனிக்கிழமையன்று கொரோனா விஷயத்தில் மோடி முறையாகக் கையாளவில்லை என குற்றச்சாட்டுகளை சுமத்தி பிலிப் ஷெர்வெல் என்பவர் எழுதிய கட்டுரையை முதலில் “தி டைம்ஸ்” இணையத்தில்தான் வெளியாகியிருந்தது. பின்னர், இது ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய ஊடகமான “தி ஆஸ்திரேலியன்” அந்த கட்டுரையின் இணைப்பைத் தமது ட்விட்டரில் பகிர்ந்து ஆணவம், தேசிய வெறி மற்றும் அதிகாரத்துவ இயலாமை ஆகியவை இணைந்து இந்தியாவின் இந்தநிலையை உருவாக்கியுள்ளன என எழுதியிருந்தது. அந்த கட்டுரையில், மேற்கு வங்கத் தேர்தலுக்கான அசன்சோலில் நடந்த தேர்தல் பேரணியில் […]