மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதித்துள்ளார், ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதால், தற்காத்துக் கொள்ள ஓடும் வாகனத்திலிருந்து வெளியில் குதித்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் சையத் அக்பர் ஹமீது, கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், தலையில் காயம் அடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி, இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
இங்கிலாந்திலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்திற்கு திரும்பிய ஒரு பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 25 க்குப் பிறகு இங்கிலாந்திலிருந்து அவுரங்காபாத் மாவட்டத்திற்கு வந்த 44 நபர்களில் இந்தப் பெண்ணும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த இங்கிலாந்து திரும்பியவர்களில் 11 பேர் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அறிகுறியற்றவர் என்று அவுரங்காபாத் மாநகராட்சியின் (ஏ.எம்.சி) சுகாதார அதிகாரி டாக்டர் நீதா படல்கர் தெரிவித்தார். அவரது மாதிரி புனேவை தளமாகக் கொண்ட […]
ரயில் மோதி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்த பகுதியில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று வருகின்றனர். இதனிடையே தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேசத்தை நோக்கி […]