உத்தரகண்ட் மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 24 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவித்துள்ள அம்மாநில அரசு, உத்தரகண்டில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். தற்போது மாநிலத்தில் 380 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாநிலத்தில் 72.26 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. […]