ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்தய நிதியமைச்சரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து கடந்த 9ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை விமர்சித்து துக்ளக் இதழின் ஆசிரியரும் பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து […]