நாட்டின் 75வது குடியரசு தினம் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கர்தவ்ய (கடமை) பாதையில் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதன்பின் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மாநிலத்தின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் […]
கொரோனா வைரஸ் காரணமாக அதை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 315 மாணவர்கள் மற்றும் 100 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் சிக்கி கொண்டனர்.இவர்கள் அனைவரும் இன்று அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றனர். “மருத்துவ நோக்கங்களுக்காக வந்து ஊரடங்கில் சிக்கிக்கொண்டேன். உதவி செய்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு நன்றி” என்று பாகிஸ்தான் சார்ந்த ஒருவர் கூறினார்.
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் மோடி , பிரேசில் அதிபர் மெசியாஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் […]