சீனாவில் தற்போது கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 304-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் 14,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே சீனாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு, விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]