கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 வது மற்றும் 4 வது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.இந்த ஒப்புதல் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதற்கு,சுற்றச்சூழல் ஆர்வலர்கள்,அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்,முதல் இரண்டு அணு உலைகளின் கழிவுகளை எங்கே வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.