அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் மாரடைப்பால் காலமானார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் கடந்த 1980 மற்றும் 1984 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர். இவர் சில நாட்களாக உடல் நல குறைவால் அவதி பட வந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திருவாரூர்,திருப்போரூர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருவாரூர் திமுக வேட்பாளர் கலைவாணன் அதிமுக வேட்பாளரை விட 63,122 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.திருப்போரூர் திமுக வேட்பாளர் இதய வர்மன் அதிமுக வேட்பாளரை விட 20,377வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளனர். திருவாரூர் திமுக 1,15,223 அதிமுக 52,101 வித்தியாசம் 63,122 திருப்போரூர் திமுக 1,02,410 அதிமுக 2,033 வித்தியாசம் 0,377
கடந்த மாதம் ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரமக்குடியில் 4 கட்ட வாக்கு எண்ணிக்கைகள் முடிந்த நிலையில் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.அப்போது இரண்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து அவரது உடலுக்கு இரங்கல் தெரிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தமிழரசன் ஆகியோர் கோபாலபுரம் வந்தனர்.