சென்னை தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 மாணவிகள் வாட்ஸ்-அப் மூலமாக புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன், விளையாட்டு வீராங்கனைகளிடம் பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக பேசி வந்ததாகவும் சமூகவலைதளத்தில் புகார்கள் வந்தன. மேலும்,கடந்த பல ஆண்டுகளாக தன்னை பாலியல் தொந்தரவு செய்ததுடன், தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று 19 வயது இளம்பெண் […]