பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த பிரவீன் குமார் விளையாடி உள்ளார். பிரிட்டன் வீரர் ஜனதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இறுதியில் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் […]
8 தங்க பதக்கங்களை வென்றுள்ள கீதா குமாரி சாலையோர கடைகளில் வேலைபார்த்த தகவல் அறிந்ததும், ஜார்கண்ட் மாநில முதல்வர் அவருக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கியும், மாதந்தோறும், 3000 ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கீதா குமாரி என்ற விளையாட்டு வீராங்கனை மாநில அளவிலான நடைப்பயிற்சி போட்டிகளில் இதுவரை 8 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டிகளில் வெள்ளி பதக்கங்களையும், வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இத்தகைய வீராங்கனை வறுமையின் […]
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் ஆண்களுக்கான 400 மீட்டர் தகுதி சுற்றில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி கலந்து கொண்டார். 400 மீட்டர் இலக்கை தருண் அய்யாசாமி 50.55 வினாடிகளில் கடந்து முதல் சுற்றிலே வெளியேறினர். கடந்த மார்ச் மாதம் பெடரேஷன் கோப்பை போட்டியில் அருண் அய்யாசாமி 48.80 வினாடிகளில் இலக்கை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.