ராமநாதபுரம் மாவட்டத்தில் வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை அளித்த மருத்துவர்கள். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பன். இவருக்கு வயது 52. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் மதுரை அரசு […]
காஞ்சிபுரம் அத்திவாரத்தை காண நாள் தோறும் லட்சக்கணக்காகில் பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். நாளை மறுநாள் அத்திவரதரை தரிக்க கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. அத்திவரதரை தரிசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன்று அரசியல் தலைவர்களும் தரிசித்து சென்றனர். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தோடு அத்திவரதரை தரிசிக்க நேற்று இரவு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க தினம் தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1 மணி வரை சுமார் 1.30 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர். தற்போது வரை 33 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வது கூட அந்த கூட்டத்தில் தாமதமாக இருக்கிறது. இந்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, மாவட்ட […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர். அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் 28-ஆம் நாளான இன்று அத்திவரதர் வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார்.இன்று விடுமுறை தினம் என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 27 நாட்களில், 38 லட்சத்து […]