தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,மதுரை ஆதீனத்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ள நிலையில்,”சர்ச் மற்றும் மசூதியின் சொத்தில் அரசு தலையிடவில்லை. ஆனால்,திருக்கோயில் சொத்துக்களில் மட்டும் தலையிடுகின்றனர். இதனால்,அறநிலையத்துறை கொள்ளையடிக்கும் கூடாரமாக திருக்கோயில் மாறி வருகிறது.எனவே,அறநிலையத்துறை எனக் கூறப்படும் அறமில்லாத துறையை கலைத்துவிட்டு ஒரு நீதிபதி, வழக்கறிஞரை போட வேண்டும்.மேலும்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம்,பொருள்கள் போடக்கூடாது.” எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,தங்களது குழுவினர் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்யவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக் கோயிலாக இருப்பதால்,கோயில் விவகாரங்களை விசாரிக்க குழு அமைக்க அதிகாரம் உண்டு […]