இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு…!! தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….