நாளை சட்டசபை கூட்டம்.. 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா..!

தமிழக சட்டசபை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கூட்டம் நாளை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கொரோனா காரணமாக நாளை முதல் ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.

கொரோனா காரணமாக சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், துணை முதல்வர், மற்றும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் சபாநாயகர் அறிவித்து இருந்தார்.

அதன்படி, முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. கொரோனா பரிசோதனை முடிவில் முதல்வர் , துணை முதல்வர், மு.க.ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் தனபால் என பல எம்எல்ஏக்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

இந்நிலையில், திருச்செங்கோடு தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி மற்றும் செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ தூசி மோகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் ஆகியோருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.