ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிந்த நிலையில், சச்சின் பைலட்டை முதல்வர் அசோக் கெஹ்லோட் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் சட்டமன்றம் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் அசோக் கெஹ்லோட் எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ராஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது […]