அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு..!

அசாம் மாநிலம் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பெருமளவு பாதித்துள்ளது. அதனால் மாநிலங்களில் பாதிப்புக்கு ஏற்றவாறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள கொரோனா பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. … Read more

அசாமில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்…!

அசாமில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் எனும் கிராமத்தில் உள்ள குடிசைகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் தங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கனமழை காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பே அவர்களது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும், இதனால் தங்கள் … Read more

அசாம் மாநிலத்தில் வெள்ளம்: 11 மாவட்டங்கள் பாதிப்பு..!

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கனமழை காரணத்தினால் தற்போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 243 கிராமங்கள்  வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இதுவரை அம்மாநிலத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது வரை வெள்ளப்பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளம் காரணமாக அம்மாநிலத்தின் பதினாறு … Read more

அசாமில் லாரிகள் மீது தீ வைப்பு – 5 பேர் உயிரிழப்பு…!

அசாமில் லாரிகள் மீது மர்ம நபர்கள் தீ வைத்ததில், 5 பெற்ற உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசாவோ நகருக்கு உட்பட்ட பகுதியில் திஸ்மாவோ கிராமம் அருகே உம்ரங்சோ லங்கா சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்த லாரிகள் மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் மீது தீ பரவியதால், 7 லாரிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இந்த … Read more

அசாமில் இன்று பிற்பகல் நிலநடுக்கம்..!

இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மேற்கு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக பதிவு : அசாமில் 14 பேர் கைது!

சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்ட அசாமை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளம் முழுவதும் இது குறித்த செய்திகள் மற்றும் கருத்துக்கள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் அனைவரும் அடைக்கலம் தேடி பல நாடுகளுக்கு சென்று வரும் நிலையில் பலரும் ஆப்கானிஸ்தானின் மக்கள் நிலையைக் குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். … Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு டிஎஸ்பி பதவி அறிவித்த அசாம் முதல்வர்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு அசாம் மாநில முதல்வர் டிஎஸ்பி பதவி வழங்கி கௌரவித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின்  போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார்.  இதனால் இவருக்கு பரிசுத்தொகை குவிந்து வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு அம்மாநில முதல்வர்  ஹிமந்த விஸ்வ சர்மா ரூ.1 கோடி பரிசுத்தொகையும், மாநில காவல்துறையில் டிஎஸ்பி பதவியையும் இன்று வழங்கியுள்ளார்.  அசாம் மாநில முதல்வர் … Read more

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!

அஸ்ஸாமில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று பகல் 12.46 மணியளவில் அஸ்ஸாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அம்மாநிலத்தின் மோரிகான் பகுதியில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 92 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அசாமில் கடுமையான நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு..!

அசாமில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. அசாமில் இன்று காலை 8.45 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அருகில் இருந்த மாநிலங்களான மேகாலயம், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்திலும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. அசாமில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கோல்பாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், 14 கி.மீ. ஆழம் வரை உணரப்பட்டும் இருந்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் … Read more

அசாமில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை…! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…!

அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை சுமார் 3.8 கிராம் 8 கிலோகிராம் எடை இருந்ததாக கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை இது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை … Read more