அசாம் : ஆட்டோ மீது ட்ரக் மோதி விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

அசாமில் ஆட்டோ மீது ட்ரக் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டம் பைதல்கால் என்ற இடத்தில் அதிகாலை 5 மணியளவில் கரீம்கஞ்ச் நோக்கி சிமெண்ட் ஏற்றி வந்த ட்ரக் ஒன்று ஆட்டோ ரிக்ஷா மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் ஒருவரைத் தவிர ஆட்டோவில் பயணம் செய்த அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், விபத்துக்கு காரணமான ட்ரக் … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…!

சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அதே போல கடந்த 1979 – 1985 வரை அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காள தேசத்துக்கு மக்கள் வெளியேறுமாறு போராட்டம் … Read more

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அசாம் எம்.எல்.ஏ கைது…!

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷர்மன் அலி அகமது கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் ஆக்கிரமிப்புப் பகுதியில் கூடியிருந்த மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்நிலையில் இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். … Read more

அசாமில் நள்ளிரவு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!

அசாமில் இன்று நள்ளிரவு 12.52 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அசாமில் தென்மேற்கு பகுதியில் 40 கி.மீ தொலைவில் நள்ளிரவு 12.52 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி;அடிப்பட்டவர் மீது கொடூரமாக ஏறி மிதிக்கும் புகைப்படக் கலைஞர்..!

அசாம் மாநிலத்தில் போலீசார் சுட்டதில் கீழே விழுந்த நபர் மீது புகைப்படக் கலைஞர் ஒருவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி,கடந்த திங்கட்கிழமையன்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில்,800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த … Read more

அசாமில் எரிக்கப்பட்ட 2,500 காண்டாமிருக கொம்புகள்..!

அசாமில் இன்று 2,500 காண்டாமிருக கொம்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. உலக காண்டாமிருக தினத்தையொட்டி அசாம் அரசு இன்று 2,479 காண்டாமிருக கொம்புகளை எரித்துள்ளது. இன்று 6 ராட்சத உலைகளில் 2,479 காண்டாமிருகக் கொம்புகளை விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும், கட்டுக்கதைகளை நீக்கவும் அசாம் அரசு எரித்துள்ளது. அசாமில் உலகிலேயே ஒற்றை கொம்பு அதிகமாக உள்ள காண்டாமிருகம் உள்ளது. இப்பகுதியில் உள்ள காசிரங்கா, மணஸ், ஓரங் ஆகிய பகுதியின் தேசிய பூங்காவில் உள்ள 2,500 க்கும் அதிகமான காண்டாமிருக கொம்புகள் … Read more

அசாமில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

அசாமில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அசாமில் உள்ள கோக்ராஜர் மாவட்டத்தில் இன்று அதிகாலை போலீசாருடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் புதிதாக யுனைடெட் லிபரேஷன் ஆஃப் போடோலாண்ட் (யுஎல்பி) குழுவின் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இம்மாவட்டத்தில் உள்ள உல்தபாணி ரிசர்வ் வனப்பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததுள்ளது. தீவிரவாதிகளின் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து,  அந்தப் பகுதியில் இருந்த இரண்டு பிஸ்டல்கள் (9 மிமீ மற்றும் 7.65 மிமீ), எட்டு ரவுண்ட் லைவ் … Read more

10 ஆண்டுகளில் 25 முறை தப்பி ஓடிய மனைவி.. அவளை உண்மையாக நேசிக்கிறேன் கணவன்!

அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் கணவரை விட்டு 25 முறை மற்றொருவருடன் தப்பி ஓடிய மனைவி. மத்திய அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள திங் லாகர் கிராமத்தில் 40 வயதான பெண், 10 வருடங்களில் 25 முறை தப்பி ஓடி வெவ்வேறு ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் மாஃபிசுதீன் கூறுகையில், 2011 ல் நாங்கள் திருமணம் செய்த பிறகு பத்து வருடங்களில் என் மனைவி சுமார் 25 முறை … Read more

அசாம் ஆற்றில் படகு விபத்து..!-70 பேரை காணவில்லை..!

அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 70 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் ஜோராட் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மா கமலா என்ற எந்திர படகு புறப்பட தாயாராக இருந்த நிலையில், அவ்விடத்திற்கு மற்றொரு படகு வந்துள்ளது. இதனால் வரும் படகிற்கு இடம் அளிக்க மா கமலா படகு சற்று நகர்ந்துள்ளது. மா கமலா படகில் 120 பயணிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் படகு நகர்ந்த போது … Read more

அசாமில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு..!

அசாம் மாநிலத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் … Read more