அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரைத் தாக்கியவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரி, மனைவி, மகன், ட்ரைவர் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கர்னல் […]