நாடுமுழுவதும் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் அசாம் மாநிலத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. அதனால் பாப்புலர் பிராண்ட் அமைப்பை தடை செய்ய வேண்டும் என அசாம் மாநில முதலவர் ஷர்மா தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் அன்று தேசிய புலனாய்வு அமைப்பு, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்.ஐ.ஏ […]
இந்தியாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரம் குறித்து அல்-கொய்தா தலைவர் அய்மன் முகமது ரபி அல்-ஜவாஹிரி கணடனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அல்-கொய்தா ஒருபோதும் புரிந்து கொள்ளாது, ஆனால் இந்திய முஸ்லிம்கள் புரிந்துகொள்வார்கள்” என்று கூறினார். அல்-கொய்தா தலைவர், செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், இஸ்லாம் மீதான தாக்குதலை “அறிவுபூர்வமாக, ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றும் போர்க்களத்தில் ஆயுதங்களைக் கொண்டு” போராடுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திருந்தார். அனைத்து […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு அசாம் மாநில முதல்வர் டிஎஸ்பி பதவி வழங்கி கௌரவித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார். இதனால் இவருக்கு பரிசுத்தொகை குவிந்து வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ.1 கோடி பரிசுத்தொகையும், மாநில காவல்துறையில் டிஎஸ்பி பதவியையும் இன்று வழங்கியுள்ளார். அசாம் மாநில முதல்வர் […]
விமான நிலையத்தில் நேரடியாக சென்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினாவை அசாம் முதல்வர் வரவேற்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா போர்கோஹேன் (23) ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு இன்று கவ்காத்தி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இதனை அடுத்து இவரை வரவேற்பதற்காக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று […]
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா மற்றும் 6 உயரதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கிடையே சமீப நாட்களாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சினை கடந்த 26-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் இரு மாநிலத்தை சேர்ந்த மக்களும், காவல்துறையினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் அசாம் காவல்துறையினர் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உள்துறை அமைச்சர் அவர்கள் இரு மாநில முதல்வர்களிடமும் […]
அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று 7:15 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று 7:15 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட […]