துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் சனிக்கிழமை தூத்துக்குடி மருத்துவமனைக்கு வருகை தந்து காயமடைந்தவர்களை சந்தித்து விபரங்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை அதிகாரி செல்வநாகரத்தினம் சாதாரண உடையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். மனித உரிமை ஆணையத்திற்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் மருத்துவமனையில் இவருக்கென்ன பணி என்கின்றனர் இவரைப் பற்றி நன்கறிந்தவர்கள்.