கையில் முத்தமிட்டு கொரோனாவை விரட்டுவதாக கூறிய சாமியார் உயிரிழப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த வைரஸ் குறித்த வதந்தியான செய்திகளும் பரவி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற சாமியார் பல ஆண்டுகளாக ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறி, தன்னுடைய மாய வலையில் சிக்க வைத்து வந்துள்ளார். […]