நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 9 பேர் கொண்ட மைய குழுவை அமைத்தது காங்கிரஸ். தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைய குழு மற்றும் பிரசார குழுவில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்தியா காங்கிரஸ் பாஜகக்கு எதிராக மொக கூட்டணி அமைத்து நாடளுமன்ற தேர்தல் போட்டியிட தயாராகி வருகிறது அதன் முன்னோட்டமாக தான் இந்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது காங்கிரஸ் என தெரிகிறது. DINASUVADU
ஆசிய விளையாட்டு போட்டி பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 23 பதக்கங்களுடன் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது. DINASUVADU