ஆசிய விளையாட்டுப் போட்டி : 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசு அறிவித்தார் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் மேலும் டூட்டி சந்த் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற அவருக்கு 1.5 கோடி பரிசு அறிவித்த நிலையில் மீண்டும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். DINASUVADU
ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 : மகளிர் 200 மீ ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 23.20 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஏற்கனவே 100மீ ஒட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் டூட்டி சந்த் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
ஆசிய விளையாட்டுப் போட்டி : பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலம் வென்றார். சீன தைபே வீராங்கனையிடம் 17-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த சாய்னா நேவால் வெண்கலம் வென்றார். DINASUVADU
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரஜ்னேஷ்க்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.தமிழக வீரமர் பிரஜ்னேஷ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனை பாராட்டி முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். DINASUVADU
ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் பைனலில் அசத்திய இந்தியாவின் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி தங்கம் கைப்பற்றியது. ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றதுள்ளது. டென்னிஸ் போட்டியில் ரோகன் போபண்ணா – திவிஜ் சரண் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தியதுள்ளது. DINASUVADU