கடந்த 30ம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை 2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இறுதி போட்டியில் நடப்பு சாமியனான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளது. ஆசிய கோப்பையின் இறுதி போட்டி கொழும்பு மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச […]
16-ஆவது ஆசிய கோப்பை 2023 ஒருநாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகள் முடிந்து, தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இறுதி போட்டியில் நடப்பு சாமியனான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளது. ஆசிய கோப்பையின் இறுதி போட்டியானது கொழும்பு மைதானத்தில் வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. […]
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடும் மிக முக்கிய தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஆசிய கோப்பை தொடரானது கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆசியா கோப்பை தொடர் ஆரம்பத்தில் ஒருமுறை நடைபெற்ற வந்த நிலையில், தற்போது சீரான இடைவெளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 முறை ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தாண்டு 2023-ல் 16-வது […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதியது .டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.மழை பெய்ததன் காரணமாக போட்டியானது 45 ஓவர்களாக குறைக்கப்பட்டு பின்பு 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமான் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க மற்றொரு புறம் அப்துல்லா ஷபீக் நிதானமாக விளையாடி 52 ரன்களை எடுத்து […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதுகிறது.டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.மழை பெய்ததன் காரணமாக போட்டியானது 45 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த வருடம் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இறுதி போட்டிக்கு செல்லும் ‘சூப்பர் 4’ சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே நடந்த சூப்பர் 4 சுற்றுகளில் […]
ஆசிய கோப்பை ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தகுதிபெற்று விளையாடி வருகின்றன. இருப்பினும், இலங்கையில் மழை பெய்து வருவதால் போட்டி சரிவர நடைபெற முடியாமல் இருந்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையில் […]
கடந்த ஆண்டு ஆசியக் கோப்பைக்கு முன்பு, பும்ராவுக்கு முகுது பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், இந்திய அணியில் பும்ராவால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் காயத்தில் இருந்து மீண்டு வந்த பும்ரா சமீபத்தில் அயர்லாந்து தொடரில் கேப்டனாக செயல்பட்டார். பும்ரா பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா ஆசியக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய பிளேயிங் லெவனிலும் பும்ரா இடம்பெற்றிருந்தார். ஆனால், மழை […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கையில் பல்லெகலே மைதானத்தில் மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக இரு அணிகளும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு தற்போது ஆசிய கோப்பை தொடரில் மோதுகின்றன. […]
ஆசிய கோப்பை தொடரில் நாளை மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இலங்கையில் பல்லேகெல்லே சர்வதேச மைதானத்தில் மதியம் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக இரு அணிகளும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு தற்போது ஆசிய கோப்பை தொடரில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் மோத உள்ளன. இதனால் இப்போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. […]
ஆசியகோப்பை 2023 : நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களே ஒட்டுமொத்தமாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகிறது. நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை விராட் கோலி அருமையாக எதிர்கொண்டு விளையாடுவார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் பார்ம் […]
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபால், வங்கதேசம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் சென்ற 30ம் தேதி தொடங்கி, இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானியில் நடந்த முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன்பின் நேற்று இலங்கையில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை சுலபமாக வென்றது இலங்கை அணி. இதுபோன்று ஆசிய கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், உலக […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியான பி பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இலங்கை அணி வங்கதேசம் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளுக்கும் இடையே நாகினி டான்ஸ் ரைவல்ரி இருப்பதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதாவது, போட்டியில் ஒரு அணி வெற்றி பெற்றால் மற்றொரு அணிய பார்த்து நாகினி டான்ஸ் ஆடி வெறுப்பேற்றுவார்கள். இதனால் இரு அணிகளுடையே இந்த நாகினி ரைவல்ரி இருக்கிறது. இந்த சமயத்தில் இலங்கையின் பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் […]
ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோதியது. இப்போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நேபால் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியுடன் நேற்று விளையாடியது. அதுமட்டுமில்லாமல், கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச களத்தில் முதல் முறையாக நேபால் அணி பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியது. இதனால் இப்போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், நேற்று நேபால் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் […]
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆசியகோப்பை 2023 தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாளத்தை எதிர்கொள்கிறது. போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தானில் நடைபெறுகிறது. இரண்டு அணி வீரர்களும் அட்டகாசமான வீரர்களை கொண்டுள்ளதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். விளையாடும் வீரர்கள் பாகிஸ்தான் ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் […]
ஆசியக் கோப்பை 2023 (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது. நாளை முதல் செப்டம்பர் 17 வரை ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. நாளை பாகிஸ்தானில் முல்தானில் உலக நம்பர் 1 ஒருநாள் அணியான பாகிஸ்தான், […]