கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான் மற்றும்தெலுங்கானா ஆகிய 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில், பாஜக பெரும்பான்மை பலத்தைப் பெற்று ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்தது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் இன்று மாலை ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அவரது இல்லத்தில் […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர மற்ற மாநிலங்களான சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா ஆகிய தொகுதிகளின் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில், தெலுங்கானா , சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் என வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. […]
நாட்டில் 5 மாநில சட்டப்பேரவையில் பாஜக எந்த மாநிலத்திலும் வெற்றி பெறாது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்த நிலையில், தெலுங்கனாவில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 5 மாநிலங்களிலும் பாஜக காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 5 மாநில தேர்தலின் முடிவு […]
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இம்மாதம் 5 மாநில தேர்தல் நடைபெபெற்று வருகிறது. ஏற்கனவே மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேச தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. நாளை மறுநாள் (நவம்பர் 25)இல் ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் தேர்தல் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற உள்ளது. அதனால் பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சார வேலைகளை மேற்கொண்டு வருகிண்றனர். இந்த ‘பாரத மாதா’ யார்? நாட்டின் செல்வம் […]
வரும் நவம்பர் 25 (சனிக்கிழமை) அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இதோடு, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா (நவம்பர் 30) ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. அதுவும். ராஜஸ்தானில் ஆளும்கட்சி காங்கிரஸ். எதிர்க்கட்சி பாஜக என்பதால் முக்கிய தேசிய தலைவர்கள் […]
காங்கிரஸ் தலைவர் பதவியில் நான் போட்டியிடவில்லை என அசோக் கெலாட் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட மறுத்த பிறகு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிடப்போவதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சி விதிப்படி, ஒருவருக்கு ஒரு பதவிதான். ஆதலால் , காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை அசோக் கெலாட் ஏற்றுக்கொண்டால், ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை […]
அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் மாநில முதல்வராக கட்சி யாரை அறிவிக்கிறார்களோ அவர்களை முதல்வராக ஏற்றுக்கொள்வோம் என ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர். இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு விட்டார். கட்சி விதிகளின்படி அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அப்படி செய்தால் ராஜஸ்தான் […]
ராஜஸ்தான்:ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம்,நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில்,விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை […]
கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் நாட்டிலேயே குறைந்த எண்ணிக்கையில் உள்ளது ராஜஸ்தான் மாநிலம். தற்போது இங்கு 81 பேர் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இந்த கொரோனா தொற்று மீண்டும் ஏற்படலாம். அதனால் அனைவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு. டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். டோக்கியோ […]
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டின் மனைவிக்கு கொரோனா நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அசோக் கெலாட் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், இன்று அசோக் கெலாட்டிற்கு கொரோனா உறுதியானது. இதுகுறித்து தனது ட்விட்டரில் எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நன்றாக இருக்கிறேன். கொரோனா நெறிமுறையைப் பின்பற்றி நான் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
பீகார் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கபில் சிபல், மக்களால் பாஜகவிற்கு எதிராக வலுவான மாற்றுக்கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. உள்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமைப்பு ரீதியாக என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தெரியும். அதற்கான பதில்களும் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கான பதில் தெரியும். ஆனால், அவர்கள் அந்த பதிலை ஏற்க மறுக்கின்றனர் என தெரிவித்தார். இந்நிலையில், கபில் சிபலின் […]
ராஜஸ்தானில் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வரான அசோக் கெக்லாட் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பரவலை கண்காணித்து ஒரு சில தளர்வுகளையும் அளித்து […]
7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் […]
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் டெல்லியில் முகாம் மிட்டார். அதன் பின்னர் 2 முறை நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கலந்துகொள்ளவில்லை. இதனால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அவருடன் ஆதரவாளர்கள் […]
ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் சந்திதனர். ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் […]
ராஜஸ்தானில் தற்போது அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முயன்று வருகிறார். ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப் பேரவையைக் கூட்ட மறுத்து வந்த நிலையில், இரண்டு நாள்கள் முன் 3 நிபந்தனைகளுடன் சட்டப்பேரவையை கூட்டத் தயார் என ஆளுநர் அறிவித்தார் என கூறப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை ராஜ்பவனில் முதல்வர் அசோக் கெலட் இன்று சந்தித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் கோரி முதல்வர் அனுப்பிய கோப்புகளை திருப்பி […]
ராஜஸ்தானில் தற்போது அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முயன்று வந்த நிலையில், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப் பேரவையைக் கூட்ட மறுத்து வந்தநிலையில், இரண்டு நாள்கள் முன் 3 நிபந்தனைகளுடன் சட்டப்பேரவையை கூட்டத் தயார் என ஆளுநர் அறிவித்தார். இதையடுத்து, முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் அவரது இல்லத்தில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சிங், […]
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார். இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு […]
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜஸ்தான் முதல்வர் , எங்கள் எம்.எல்.ஏக்கள் எந்த தடையும் இல்லாமல் தங்கியிருக்கிறார்கள். ஆனால், சச்சின் பைலட் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்துள்ளனர். அவர்கள் எங்களை அழைத்து தொலைபேசியில் அழுகிறார்கள். அவர்களின் தனிப்பட்ட மொபைல் போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் எங்களுடன் சேர விரும்புகிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் தெரிவித்தார். சச்சின் பைலட் கடந்த 6 மாதங்களிலிருந்து பாஜகவின் ஆதரவுடன் சதி செய்து கொண்டிருந்தார். அரசாங்கத்தை கவிழ்க்க சதி நடக்கிறது என்று நான் […]