அசானி புயல் 24 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் மழை தொடரும் என்றும் ஆந்திரா அருகே வங்கக்கடலில் நிலவும் அசானி புயல் 24 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறியுள்ளது. தற்போது ஆந்திராவுக்கு அருகே மத்திய மேற்கு வங்கக்கடலில் அசானி புயல் நிலவி வருகிறது. இந்த புயல் வலுவிழந்து […]
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்துள்ளது ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 90 கிமீ தொலைவில் நிலவுகிறது எனவும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் இன்று காலை 11 மணிக்கு அடைந்து,பின்னர் திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்,வடக்கு ஆந்திரா […]
அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து செல்லு 10 விமானங்கள் இன்று ரத்து. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் […]