பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதனையடுத்து உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவின் அருகில் உள்ள நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,817-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,315 ஆக உள்ளது.385 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குஇடையில் அசாத் குவைசர் என்பவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற சட்ட கீழவையின் சபாநாயகராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.இவரது மகன் மற்றும் மகளுக்கும் கொரோனா […]