அசாம் மாநிலத்தில்,பறவைகள் தற்கொலை செய்யும் ஒரு வினோதமான சம்பவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அசாமில் உள்ள ஜடிங்கா என்னும் மலைக் கிராமத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் பறவைகள் படையெடுத்து செல்கின்றன.ஆனால்,இனப்பெருக்கத்திற்காக பறவைகள் அங்கு செல்லவில்லை.மாறாக,தற்கொலை செய்து கொள்ளவே அங்கு செல்கின்றன.இதை நம்ப முடியாவிட்டாலும் அதான் உண்மை. ஜடிங்கா கிராமத்தில், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள மரங்களில் மோதியும்,மரத்தின் உச்சியில் இருந்து […]
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மொத்த உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கனமழை பெய்யும் என்று அறிவித்திருந்தது , மேலும் ஜூலை 19 முதல் 21 வரை மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இது அருணாச்சல பிரதேசத்திற்கு 19ம் தேதி முதல் 20ம் தேதி வரை முதல் சிவப்பு எச்சரிக்கையும், ஜூலை 21 க்கு […]
அசாமின் காசிரங்காவில் காணப்பட்ட ஒரு கோல்டன் புலியின் படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்தியாவில் உயிருடன் இருப்பதாக அறியப்பட்ட ஒரே தங்க புலி இதுவாகும். இந்திய வன அலுவலர் பர்வீன் கஸ்வான் அவர்களால் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘டாபி புலி’ அல்லது ‘ஸ்ட்ராபெரி புலி’ என்றும் அழைக்கப்படும் கோல்டன் புலியின் படங்களை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மயூரேஷ் ஹென்ட்ரே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். 21 […]
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பீகாரிலும் கடந்த வாரம் பலத்த மலை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் அசாமில் 64 பெரும், பீகாரில் 102 பெரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இந்த மக்களின் நிலையை அறிந்த பலரும் இவர்களுக்கு உதவிக்கு கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சன் அசாம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.51 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதனையடுத்து அசாம் முதலமைச்சர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் அக்சய் குமார் அசாம் […]
அசாம் மாநிலத்தில் பாஜக மாவட்ட தலைவரை மாணவர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் பாஜகவின் மாவட்ட தலைவர் லக்க்ஷவர் மோரனை, அம்மாநில மாணவர் அமைப்பினரும்., ஜதியதாபாடி யுபா சத்ரா பரிஷத் அமைப்பினரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இந்தக் காட்சி வைரலாகி உள்ளது. பாஜகவினர் நடத்திய பொதுக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக யுபா பரிஷத் அமைப்பினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலத்தில் உள்ள சிராங் மாவட்டத்தில் உள்ள ஏய் நதிக்கரையில் கடந்த 3 ஆண்டுகளாக டிவைஜிங் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா சுமார் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள்.இதில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் அஸ்ஸாம் மாநில பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி,பாட்டு, பாரம்பரிய குத்துச்சண்டை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதால் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
அசாமில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலைப் பாலம் லேசர் விளக்குகளால் மின்னியது, கண்களுக்கு விருந்தாய் அமைந்தது. அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே, 4 புள்ளி 94 கிலோ மீட்டர் நீளத்துக்கு போகிபீல் பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலத்தின் கீழடுக்கில் இருவழி ரயில்பாதையும், மேலடுக்கில் 3 வழிச்சாலைகளும் அமைந்துள்ளன. ஐந்தாயிரத்து 960 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ம் […]
அசாமில் சாலையில் கிடந்த பொம்மை காரை எடுத்து வீட்டில் வைத்து விளையாடியபொழுது வெடித்ததில் சிறுமி மற்றும் தாயார் காயமடைந்தனர். அசாமில் மணிபுரி பஸ்தி பகுதியில் சாலையில் பொம்மை கார் ஒன்று பையுடன் கிடந்துள்ளது. இதனை ஒருவர் கவனித்துள்ளார். அதன்பின்னர் அருகிலிருந்த வீட்டில் வசித்த ஒரு சிறுமி அந்த பொம்மை காரை எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளாள். அந்த காரை ஓட்ட முயற்சிக்க அது வெடித்துள்ளது. இதில் சிறுமி மற்றும் அருகிலிருந்த சிறுமியின் தாயார் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் […]
இளம் ஓட்டப்பந்தைய வீரங்கனையான ஹிமா தாஸ் உலக ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு சமீபத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கியது. இதற்கிடையே 18 வயதான ஹிமா தாசை அசாம் மாநில தூதராக அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கான அறிவிப்பை அசாம் முதல்- அமைச்சர் சர்பானாந்த் சோனாவால் அறிவித்துள்ளார். DINASUVADU