துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அரவிந்த்லால் , அர்ஜுன்சிங் 3-வது இடம் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஒலிம்பிக் 2020 தொடரில் முதல் கட்டமாக கடந்த 2 நாட்களாக தகுதி போட்டிகள், முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா சில பிரிவுகளில் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. இந்நிலையில், துடுப்பு படகு போட்டியில் நேற்று நடந்த தகுதி சுற்றில் இந்தியாவின் அரவிந்த்லால் , அர்ஜுன்சிங் 5-வது இடத்தை பிடித்தனர். இதையடுத்து, இன்று 2-ம் கட்ட சுற்று நடைபெற்றது. […]