டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலில் அமலாக்கத்துறையினர் கைது செய்து இருந்தனர். அடுத்ததாக இதே வழக்கில் சிபிஐ விசாரணை குழுவினரும் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில், கெஜ்ரிவாலுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் கைதாகி இருந்ததால் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்த சிசோடியாவுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த மணீஷ் சிசோடியா இன்று டெல்லியில் நடைபெற்ற ஓர் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் தற்போது ஜாமீனில் வெளியே வந்தது விடுமுறையை கொண்டாட அல்ல. […]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவால் இடைக்கால ஜாமீன் பெற்று இருந்தார். பின்னர் ஜாமீன் காலம் முடிந்து ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைந்தார். இதனை அடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அண்மையில், அமலாகாத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதகவே, […]
டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அமலாக்கத்துறையின் இந்த கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை முன்னதாக நடைபெற்று வந்தத நிலையில் இன்று நடைபெற்ற […]
அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதலைமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைது செய்து இருந்தது. மேலும், இதனை தொடர்ந்து சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்திருந்தார். இதனால், இன்றைய நாளில் இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை தொடர்ந்து இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு […]
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அந்த புகாரின் பெயரில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டஅரவிந்த் கெஜ்ரிவிலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் 20ஆம் தேதி ஜாமின் வழங்கியது. அதன் பின்னர் அமலாக்கத்துறை உடனைடியாக உயர்நீதிமன்றத்தை நாடி ஜாமீன் மீது இடைக்கால தடை வாங்கியது. பின்னர், நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]
அரவிந்த் கெஜ்ரிவால்: மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததன் பெயரில் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பின் அந்த ஜாமீனை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின் இன்று காலையில் டெல்லி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை அதே மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சித் […]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது, டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அதே மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக, இதற்கான ஆதாரங்களை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ இன்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த […]
அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதலைமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 20-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி மாநில உயர்நிதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், டெல்லி உயர் […]
டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வேளையில், கடந்த வியாழன் அன்று சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கெஜ்ரிவால் ஜமீனுக்கு அடுத்த நாளே (வெள்ளி) தடை வாங்கியது. இந்த ஜாமீன் […]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , அமலாக்காதுறையால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின் படி, 21 நாட்கள் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால், நாளை ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைய வேண்டும். இதற்கிடையில், தனது மருத்துவ காரணங்களை மேற்கோள் காட்டி மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி டெல்லி சிறப்பு […]
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை 7 நாட்கள் நீட்டிக்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மே 10ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால […]
டெல்லி: ஜூன் 1 வரையில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரிய கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த, வழக்கு விசாரணையின்போது, கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி […]
டெல்லி: ஜூன் 1இல் நிறைவடைய உள்ள இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், மனீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை. […]
சென்னை: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் கிடையாது. – உச்சநீதிமன்றம் உத்தரவு. ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். இவர் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதே போன்ற வழக்கில் கைதாகி இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக ஜூன் 1 வரையில் ஜாமீன் […]
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு வரவேற்பு தெரிவித்து I.N.D.I.A கூட்டணி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் இருந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜூன் 1 வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நேற்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இடைக்கால ஜாமீன் […]
Arvind Kejriwal : ஜூன் 4இல் பிரதமர் மோடிக்கு ஓய்வு என ஆம் ஆத்மி அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி இருந்த அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரையில் இடைகால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்து இருந்தது உச்சநீதிமன்றம். இதனை அடுத்து அவர் நேற்று திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அதனை அடுத்து வீடு திரும்பிய கெஜ்ரிவால், இன்று காலை டெல்லியில் உள்ள அனுமன் கோவிலுக்கு […]
Arvind Kejriwal : இடைக்கால ஜாமீன் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இவரது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இடைக்கால நிவாரணமாக ஜூன் […]
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் , ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது வரை அவர் டெல்லி திகார் சிறையில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான […]
Arvind Kejriwal: ஜாமீன் கேட்டு ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு கேள்வி. கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதன்பின் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொண்டு இருந்தது. அதன்படி அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும், காவலில் அனுப்பியதை எதிர்த்தும் […]