பெரியார் சிலையை அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர் இது குறித்து அளித்த புகாரின் பேரில் 153, 153 ஏ(1)(பி), 504 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இந்த சம்பவத்திற்கு தமிழக […]