மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது முகநூலில் கூறியதாவது ,கடந்த காங்கிரஸ் அரசு ஆதாரை அமல்படுத்துவதில் அரை மனதுடன் இருந்தது.தற்போது பிரதமர் மோடியின் தலைமைலான அரசு ஆதார் வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளது , போலியான ஆதாரை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்ததால் அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பாகவந்துள்ளதாக தெரிவித்தார். இந்த தொகையின் மூலம் மாபெரும் மூன்று நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பதால் வேலையிழப்பு ஏற்படாது, என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவற்றை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அருண் ஜேட்லி, வங்கிகள் இணைக்கப்படுவதால், கடன் அளிக்கும் நடைமுறை செலவுகள் வெகுவாக குறையும் என்றார். பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிகள் வாராக்கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்ட அவர், அதை சரி செய்யவே வங்கிகள் இணைப்பு என கூறினார். […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் கோமாளி இளவரசர் என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்தமைக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சி, அருண் ஜேட்லியை அரசவைக் கோமாளி என்று கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று பதில் அளித்திருந்தார். அதில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த ஜேட்லி, கோமாளி இளவரசர் என்றும், ஆளுமை தொடர்பான சிக்கல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இதற்குப் […]
பெட்ரோல், டீசல் விலையை ட்வீட் போடுவதால் குறைந்து விடாது என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தொடங்கிய விலையேற்றம், இன்றுவரை ஓயவில்லை. இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. லாரி உரிமையாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்ததால் மத்திய அரசு ஒரு உறுதியான […]
விஜய் மல்லையா அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறியதை பெரிது படுத்தும் காங்கிரஸின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்று சிவசேனா கடுமையாகத் தாக்கியுள்ளது. இது குறித்து அதன் கட்சிப்பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தச் சர்ச்சைகளே 2019 லோக்சபா தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொள்வதற்கான ஒரு பகுதியே. மல்லையா ஒரு பொய்யர், அவர் கூறிய ஒரு வார்த்தை அருண் ஜேட்லியை பிரச்சினைக்குள்ளாக்கியது. லண்டன் செல்லும் முன் அருண் ஜேட்லியைச் சந்தித்து செட்டில் செய்வதாகக் கூறியதாகத் தெரிவித்தார். மல்லையா போன்ற ஒரு பொய்யரின் கூற்றை […]
வங்கிக் கடன் மோசடியில் சிக்கி வழக்கையும் நாடுகடத்தலையும் எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா தப்பிச் செல்வதற்கு உதவிய அதிகாரி பிரதமர் மோடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றம்சாட்டியுள்ளார். அன்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா தான் லண்டன் வருவதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகத் தெரிவிக்க அதனைச் சுற்றி கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. அருண் ஜேட்லி அது ஒரு முறைசாரா சந்திப்பு, அதில் ஒன்றும் […]
குடியரசு துணைத்தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு பாராளுமன்றத்தில் இன்று காலை நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு மாநிலங்களவை எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைத்தார் சமீபத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு எம்.பி.கள் நியமனம் செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நிதி மந்திரி அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களில் இருந்து போட்டியிட்ட பா.ஜ.க தலைவர்களான ஜி.வி.எல் நரசிம்ம ராவ், ஹர்நாத் யாதவ், அசோக் பாஜ்பாய், விஜய் பால் சிங் […]
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த நிதியாண்டுக்கு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்கும் அரசு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இதனால், நாளை பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் தாக்கல் செய்யும், முழு அளவிலான கடைசி […]