சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆணைய அறிக்கையை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் சம்பந்தபட்டவர்கள் மீது கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதன் உண்மை தன்மை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக பல்வேறுசர்ச்சைகள் எழுந்த நிலையில்,அவரது மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு,ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.அதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக,அண்மையில் மீண்டும் விசாரணையை தொடங்கிய நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. வரும் 24-ஆம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் அறிக்கையை தயார் செய்ய அவகாசம் இல்லை என்பதால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. […]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி புகழேந்தி கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பிடமும் ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணையம் […]
ஜெயலலிதா மரணம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று முடிவு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையானது இடையில் முடங்கியிருந்த நிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் இதுதொடர்பான விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. அந்தவகையில், சமீபத்தில் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அவரிடம் இருந்து […]
ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு வரை நலமாக இருந்ததாக மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் நடந்த மறுவிசாரணையில், அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு எக்மோ கருவி பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது என்று மருத்துவர் விளக்கமளித்தார். செப்டம்பர் 29, 30, அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், பின் தேவையில்லை […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி ஆஜர்: அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகினார்.இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது. இளவரசி அளித்த வாக்குமூலம்: இந்நிலையில்,”அப்பல்லோ மருத்துவமனையில்,ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா […]
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், இன்று முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சமயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்போரின் அடிப்படையில் […]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% ஏற்கனவே முடிந்துவிட்டது என்று ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் பதில். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய அப்போது கூறப்பட்டது. ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நடைபெறவில்லை. […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாத காலம் கால அவகாசம் நீட்டிப்பு. கடந்த 2017ம் ஆண்டு செப்.25-ல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில், 11வது முறையாக 6 மாதம் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 26 மாதங்களாக முடங்கியுள்ள ஜெயலலிதா மரணம் […]