உரிய நேரத்தில் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து – உள்துறை அமைச்சர் அமித் ஷா

உரிய நேரத்தில்  ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அவர் பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை  நீக்கி , யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிகமானது.370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசத்தில் பரவலாக்கம் … Read more

காஷ்மீர் விவகாரம் : டெல்லியில் 22-ஆம் தேதி அனைத்துக்கட்சி எம்பிக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

டெல்லி ஜந்தர்மந்தரில் 22ஆம் தேதி திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்பிக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து  370-வதை  ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  காஷ்மீர் விவகாரத்தில்  முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு … Read more

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாநிலங்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதன் மீதான குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்குஆதரவாக 125 பெரும் வாக்குகளும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர். இந்த நிலையில் இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பின்னர் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.மசோதாவுக்கு ஆதரவாக 351 … Read more

அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார்-காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவை  இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை  அமைச்சர் அமித் ஷா.தாக்கல் செய்த பின்னர் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அனைத்து விதிகளையும் மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை .அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார்.திறந்தவெளி சிறைச்சாலையாக காஷ்மீர் மாற்றப்பட்டுவிட்டது. ஐ.நா. கண்காணித்து வரும் போது உள்நாட்டு விவகாரம் என எப்படி … Read more

ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்-கமல்ஹாசன்

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா   மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும்  இந்திய அரசியல் சாசனத்தின்  சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.மேலும் ஜம்மு -காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிகிறது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் … Read more

காஷ்மீர் விவகாரம் : மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கைது

நேற்று மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,உமர் அப்துல்லா கைது தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவலில் மெகபூபா கைது செய்யப்பட்டுள்ளார் .இவரை தொடர்ந்து உமர் அப்துல்லாவும் கைது … Read more

இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை தமிழகத்திற்கும் நடக்கலாம்- ப.சிதம்பரம் எச்சரிக்கை

இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த  நிலையில் மாநிலங்களவையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  மிகப்பெரிய தவறை இந்த அவை இன்று செய்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மக்களின் உரிமையை காக்க வேண்டியது அரசின் மிகப்பெரிய கடமை ஆகும். வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம்; இது ஒரு … Read more

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து!ஜனநாயக படுகொலை ! மு.க.ஸ்டாலின் ஆவேசம்

இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, ஜனநாயக படுகொலை. இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போயிருப்பது கண்டிக்கத்தக்கது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் … Read more

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து! குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் முடிவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவை மற்றும் மக்களவையில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் காஷ்மீர் விவகாரம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும்  இந்திய அரசியல் சாசனத்தின்  சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய குடியரசு தலைவர் … Read more