பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷத் ஷெரிப், கென்ய போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 50 வயதான அர்ஷத் ஷெரிப், பாகிஸ்தானின் ராணுவத்தை விமர்சித்த காரணத்துக்காக கைது செய்யப்படுவதை தவிர்க்க பாகிஸ்தானை விட்டு வெளியேறி கென்யாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அர்ஷத் ஷெரிப், தனது சகோதரர் குர்ரம் அகமதுவுடன் காரில் சென்றுகொண்டிருந்த போது நைரோபி-மகடி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசை மீறி வேகமாக சென்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அர்ஷத் ஷெரிப், தலையில் குண்டு […]