சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இதன் காரணமாகவே 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27) நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதனால், நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து இன்று காலை விமானம் மூலம் கோயம்பத்தூர் விமான நிலையம் வந்தடைந்த திரௌபதி, ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்குச் செல்வார் […]