புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில” கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை “வாழ்ந்தது தெரியவந்தது.இந்த சிறைகளில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த “டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததுள்ளனர்”. […]
சென்னை மந்தைவெளியில் சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆயுதப்படை காவலரான மணிமாறன், கடந்த 2-ஆம் தேதி அதிகாலை சீருடையுடன் வீட்டிலிருந்து பணிக்கு புறப்பட்டபோது, பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். அவர் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அபிராமபுரம் போலீசார், சந்தேகத்துக்குரிய 3 பேர் மந்தைவெளி, அபிராமபுரம், மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் செல்போன் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மாவட்ட ஆண்கள் சிறையிலிருந்து தப்பிய சகாதேவன் என்ற விசாரணை கைதி கிருஷ்ணகிரி பர்கூரில் சிக்கினார்.. சிறையின் பின்பக்க மரத்தில் லுங்கியை கட்டி சுவர் ஏறி சகாதேவன் தப்பியதாக போலீசார் தகவல் கிடைத்துள்ளது.