உத்தரகண்ட் , உத்தர்காசியில் சில்கியாரா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 17வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீட்பு பணிகள் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட தொடர் கோளாறு காரணமாக, கைகளால் துளையிடும் “எலி துளையிடும் முறை” பின்பற்றப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி […]