அருணாச்சல பிரதேசத்தில், இந்திய ராணுவ இலகுரக போர் ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளானது. அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள டுட்டிங் பகுதிக்கு அருகே இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் மேம்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை வழியாக செல்ல முடியாத மலைப்பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள டுட்டிங் தலைமையகத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் […]