காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அமைதி பேச்சுவார்த்தை நடந்தாலும் அதை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் 3 நாட்களில் மட்டும் 7வது முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இவர்களின் தாக்குதலுக்கு எதிராக இந்திய வீரர்கள் தக்க பதில் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.