ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்குமாறு ராணுவத்தினருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ரமலான் மாதத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. இதனை தீவிரவாதிகள் நிராகரித்துவிட்டதால, அவர்கள் சுட்டால் தற்காப்புக்காக திருப்பி சுடலாம் என்று ராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் தீவிரவாதிகளை சுட வேண்டாம் என்றும் அவர்களை உயிருடன் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் அத்தகைய […]